தமிழ் மொழி கற்றல் கற்பித்தல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் — ஒரு பன்முகப் பார்வை
Changes in the History of Tamil Language Teaching and Learning — A Multi-Dimensional Perspective
DOI:
https://doi.org/10.37134/jvt.vol7.1.1a.2026Keywords:
தமிழ் கற்றல் கற்பித்தல், குருகுல கல்வி முறை, திண்ணைப் பள்ளி, நவீன கல்வி, கல்வியியல் மாற்றங்கள்Abstract
தமிழ் மொழி கற்றல் கற்பித்தல் வரலாற்றில் சங்ககாலம் முதல் இன்றைய நவீன காலம் வரை ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் முதன்மையான நோக்கமாக அமைகிறது. குருகுல கல்வி முறை, திண்ணைப் பள்ளிகள் ஆகிய பண்டைய கற்பித்தல் நிறுவன முறைகளிலிருந்து தொடங்கி, ரூசோ, பெஸ்டலாசி, ஹெர்பார்ட், பிரோபெல், ஜான் டுயி போன்ற மேற்கத்திய கல்வியாளர்களின் கோட்பாடுகளின் வழியாக கற்போர் மையமான கல்வி நோக்கிலான மாற்றங்களையும் இக்கட்டுரை விளக்குகிறது. எழுத்துச் சீர்திருத்தம், அச்சு இயந்திரத்தின் வருகை, உரைநடை வடிவத்திற்கான மாற்றம், தனித்தமிழ் இயக்கம், கணினி மற்றும் இணையவழிக் கற்றல் ஆகியவை தமிழ் மொழிக் கல்வியில் ஏற்படுத்திய திருப்புமுனைகளை இக்கட்டுரை வரலாற்று வரிசையில் ஆராய்கிறது. பண்டைய மனப்பாட முறையிலிருந்து இன்றைய கற்பனைத்திறன், உரையாடல், குழுச்செயல்பாடு அடிப்படையிலான கற்பித்தல் முறைகளுக்கான மாற்றம் தமிழ் மொழி கற்பித்தலில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றங்களில் ஒன்றாகும். இலக்கிய ஆதாரங்களையும் கல்வியியல் கோட்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பண்பு சார்ந்த அணுகுமுறையில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு, தமிழ் மொழிக் கற்பித்தலில் காலந்தோறும் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியை பன்முகப் பார்வையில் உணர்த்துகிறது.
This article aims to examine the changes that have occurred in the history of Tamil language teaching and learning from the Sangam period to the present modern era. Beginning with ancient institutional pedagogical frameworks such as the Gurukula system and Thinnai (verandah) schools, the article traces the shift towards learner-centred education through the theoretical contributions of Western educationists including Rousseau, Pestalozzi, Herbart, Froebel, and John Dewey. The article further investigates, in historical sequence, the pivotal transformations brought about in Tamil language education by script reform, the advent of the printing press, the transition from verse to prose composition, the Pure Tamil Movement, and the emergence of computer and internet-based learning. The transition from the ancient practice of memorisation to contemporary teaching methods grounded in creative thinking, dialogue, and group activity represents one of the fundamental changes in Tamil language pedagogy. Employing a qualitative approach that integrates literary evidence with educational theory, this study illuminates the evolutionary development of Tamil language instruction across different historical periods from a multi-dimensional perspective.
KEYWORDS: Tamil teaching and learning, Gurukula system, Thinnai schools, Modern education, Pedagogical changes
Downloads
References
கணபதி, வி. (1991). நற்றமிழ் கற்பிக்கும் முறைகள். சென்னை: சாந்தா பப்ளிஷர்ஸ்.
சுப்பிரமணியன், ச. வே. (2004). தமிழ் மொழி வரலாறு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
Caldwell, R. (1875). A comparative grammar of the Dravidian or South-Indian family of languages (2nd ed.). Trübner & Co.
Krishnamurti, B. (2003). The Dravidian languages. Cambridge University Press. https://doi.org/10.1017/CBO9780511486876
Rajam, V. S. (1992). A reference grammar of classical Tamil poetry. American Philosophical Society.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 A. Ajish

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.


