மாணவர்களிடையே மென்திறன்களை வளர்ப்பதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை இனம் காணல்
Identifying The Factors Influencing The Development of Soft Skills Among Students
DOI:
https://doi.org/10.37134/jvt.vol7.1.5.2026Keywords:
மென்திறன்கள், மாணவர்களின் பங்களிப்பு, கற்பித்தல் முறைAbstract
மாறும் உலகிற்குப் பொருத்தமான எதிர்கால சந்ததியினை உருவாக்குவது கல்வியின் முக்கிய நோக்கமாகும். கல்வியானது மனித வள மேம்பாட்டிற்கும் மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைகின்றது. கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது குறித்த நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நேரான சிந்தனை, படைப்பாற்றல் திறன், பிரச்சினை தீர்த்தல் திறன், சிறந்த தொடர்பாடல் திறன், குழுவாக இணைந்து செயற்படும் திறன் போன்ற மென்திறன்கள் தரமான கல்விச் சமூகத்திற்கு அவசியமானதாக அமைகின்றன. குறித்த ஆய்வானது மாணவர்களிடையே மென்திறன்களை வளர்ப்பதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை இனம் காணும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொகைசார் அணுகுமுறையிலான இவ்வாய்வானது நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள பத்துப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. படை மாதிரி எடுப்பு முறையில் தரம் பத்தின் 100 மாணவர்கள், 20 ஆசிரியர்கள், 10 அதிபர்கள் ஆய்வு மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டனர். SPSS மென்பொருளை பயன்படுத்தி இணைவு பரிசீலனை, பிற்செலவுப் பகுப்பாய்வு நுட்பங்கள் மூலம் ஆய்வு முடிவுகள் முன் வைக்கப்பட்டன. சீராக்கப்பட்ட R² பெறுமதி 0.782 மற்றும் பொருண்மை பெறுமானம் 0.000 ஆகக் காணப்பட்டது. மாணவர்களின் பங்களிப்பு 11.3%, கற்பித்தல் முறை 33.6%, அதிபர்களின் ஆதரவு 13.4% எனத் தாக்கம் செலுத்துகின்றன. 80% மாணவர்கள் சராசரிக்கும் அதிகமான மென்திறன் பங்களிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அழகியல் பாடங்கள், விளையாட்டுக்கள், மன்றங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் செயன்முறை ரீதியான செயற்பாடுகள் மாணவர்களிடையே மென்திறன்களை விருத்தி செய்வதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
The primary objective of education is to develop future generations who are capable of adapting to a rapidly changing world. Education serves as a fundamental catalyst for human resource development and the advancement of human life. Educational progress plays a significant role in the overall development of a nation. Soft skills such as critical thinking, creativity, problem-solving ability, effective communication, and teamwork are essential components of a quality educational community. This study was conducted with the aim of identifying the factors that influence the development of soft skills among students. Adopting a quantitative research approach, the study was carried out in ten schools within the Hatton Education Zone of the Nuwara Eliya District. Using a stratified sampling technique, a sample comprising 100 Grade 10 students, 20 teachers, and 10 principals was selected. The findings were analysed using SPSS, employing correlation analysis and regression analysis techniques. The adjusted R² value was recorded at 0.782, while the significance value was 0.000. Student participation contributed 11.3%, teaching methods 33.6%, and principals' support 13.4% towards soft skills development. Furthermore, 80% of students demonstrated above-average soft skills development. Aesthetic subjects, sports activities, clubs and societies, cultural programmes, and practical-oriented activities were found to significantly influence the enhancement of soft skills among students.
KEYWORDS: Soft Skills, Student Participation, Teaching Methods, Principals' Support, Soft Skills Development, Communication Skills
Downloads
References
Andree, K. (2025). Soft skills and student success in higher education. Journal of Educational Research.
Careemdeen, J. (2023). Parental socioeconomic impact on soft skills development. International Journal of Academic Research in Progressive Education and Development (IJARPED).
Chandrasena, A., & Shanika, S. (2021). Soft skills as a driver of graduate employability. University of Sri Jayewardenepura.
De Silva, G. (2015). Soft skills for ICT professionals in Sri Lanka. KDU.
Heckman, J., & Kautz, T. (2012). Hard evidence on soft skills. Labour Economics, 19(4), 451–464. https://doi.org/10.1016/j.labeco.2012.05.014
James, M. (2012). Soft skills and technical competencies: A comparative analysis. Human Resource Development Review, 11(3), 278–296.
Katerina, M. (2011). Soft skills in the workplace: Employer perspectives. Journal of Workplace Learning, 23(5), 341–356.
Keneth, R. (2025). School administration and soft skill development. Educational Management Administration & Leadership, 53(1), 12–28.
Karunarathne, H. M. L. P., & Ariyawansa, R. (2022). Soft skill development in Sri Lankan universities. Sri Lanka Journal of Education, 3(1), 45–62.
NCERT. (2019). National curriculum framework for school education. New Delhi: NCERT.
Rao, M. S. (2014). Soft skills: Enhancing employability. New Delhi: I.K. International Publishing House.
Robbins, S. P., & Judge, T. A. (2013). Organizational behavior (15th ed.). New Jersey: Pearson Education.
Robles, M. M. (2012). Executive perceptions of the top 10 soft skills needed in today's workplace. Business Communication Quarterly, 75(4), 453–465. https://doi.org/10.1177/1080569912460400
UNESCO. (2015). Education for all 2000–2015: Achievements and challenges. Paris: UNESCO Publishing.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 Malini Muraleetharan

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.


