“வெறும் நீரல்ல எங்கள் மூதாதையரின் குருதி ”- புகலிடப்புனைகதைகள் -ஓர் ஆய்வு
"Not just water - The blood of our Ancestors" - A study of Exile Tamil Fictions
DOI:
https://doi.org/10.37134/jvt.vol2.2.1.2021Keywords:
குருதி, தாய் நிலம், தமிழ் ஈழன், திறவுகோல், மறதிசார் இடர்ப்பாடுAbstract
சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் எரியும் கருத்தியல் (Burning Idealism) அகதிமை சார் அலைந்துழல்வும் அதன் படைப்பாக்கமும் எனலாம். இன்று உலகின் பல நாடுகளிலும் விரவியிருக்கிற தமிழர்கள் பல்லின / பல்பண்பாட்டு / பன்மொழிகளுக்கு இடையிலான இடைஉறவுகளோடும் முறிவுகளோடும் வாழ்வதன் பிழிவைப் படைப்புகளாக்கிப் புலப்படுத்தி வருகின்றனர். புனைகதைத் துறையில் இப்படியான பங்களிப்புச் சற்றுக் கனதியாகவே உள்ளதென்பதைக் கணிக்க முடியும். காலனிய காலத்தில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பர்மா, ரியூனியன், டிரினிடாட், சிசேல்ஸ், இந்தோனேசியா, ஜாவா, சுமத்திரா, கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து என, தமிழர் பரவலாக உலகின் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தாலும் ஒரு சில நாடுகளில் மட்டுமே தமிழ்ப்படைப்பாக்கம் முகிழ்த்தது. அவற்றுள் முக்கியமாக அதிக அளவில் தமிழ்ப் படைப்பாக்கமானது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆகிய மூன்றுநாடுகளில் மட்டுமே பரவலாக வளர்த்தெடுக்கப் பட்டது. பின்காலனிய காலத்தில் ஈழப்போர் மிகப்பெரும் அளவுக்குத் தமிழர்கள் புகலிடம் தேடி புலப்பெயர்வை மேற்கொள்ளும் நெருக்கடிக்குத் தள்ளியது. இலங்கையிலிருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, நார்வே, நெதர்லாந்து, டென்மார்க், பிரான்ஸ்,ஸ்வீடன், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் பெயர்ந்து சென்ற எண்பதுகளின் தலைமுறையினர் மொழி அடையாளத்தைத் தொலைக்கும் நிலை, புதிய சூழலில் நிலைகொள்ளும் போராட்டம், பண்பாட்டு அதிர்ச்சி, மண்ணின் மைந்தர் கொள்கைகளால் இன நிற வெறிப்போக்குகள் போன்ற இடர்கள் மேற்கிளம்பி வாழ்தலுக்கான அறைகூவல்களை எழுப்பியுள்ளன. இவை யாவும் படைப்புத்தளத்தில் கருவாக உருப்பெறுகின்றன. புதுப்புது மொழிச்சூழலின் தாக்கம் காரணமான வெளியீட்டுப் புதுமைகளும் நிகழ்ந்துள்ளன. புதிய திணைப்பரப்பு, மொழி அடையாள இழப்பு, பண்பாட்டு முறிவுகள், இன நிறவெறிப்போக்குகள், பிரிவுத்துயரும் தாய்மண்ஏக்கமும், புதியவட்டார மொழியாக்கம், கல்வி/வேலைவாய்ப்பு இடர்கள், பாலியல் நெருக்கடிகள், காலநிலை ஒவ்வாமைகள் என கருப்பொருள்கள் விரிவடைந்து தமிழ்ப்புனைகதைகளைப் புத்தாக்க நிலையிலும் பரவலாக்க வாய்ப்பிலும் வளர்த்தெடுக்க ஏதுவாகியுள்ளதைக் காண்கிறோம். தமிழ்ப் புனைகதைத்துறை உலகு தழுவிய புகலிடத் தமிழ்ப் புனைகதைகளாக விரிவும் ஆழமும் கொண்டு துலங்கக் காண்கிறோம். இத்தகு புகலிடத் தமிழ்ப் புனைகதைகளிலிருந்து வகைமாதிரியான சில சிறுகதைகள் கணக்கில்கொண்டு இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.The Burning Idealism of Contemporary Tamil Society is the refugee wave and its creation. Today, Tamils spread across many parts of the world are exposing the strains of living with multilingual / multicultural / inter relationships and fractures. During the colonial period, Tamils migrated to various parts of the world, such as Sri Lanka, Malaysia, Singapore, Mauritius, Burma, Reunion, Trinidad, Seychelles, Indonesia, Java, Sumatra, Cambodia, Vietnam and Thailand. Among them, the large number of Tamil works was widely developed only in Sri Lanka, Malaysia and Singapore. During the post-colonial period, the Eelam War plunged a large number of Tamils into a crisis of seeking refuge and emigrating. Generations of large numbers who migrated from Sri Lanka to countries such as the United States, Australia, the United Kingdom, Canada, Switzerland, Norway, the Netherlands, Denmark, France, Sweden, and Germany are losing their language identity, the struggle for survival in the new environment, the cultural shock, the racism caused by the policies of the son of soil. Risks have escalated and raised calls for survival. All of these are embodied in the creative platform. Publishing innovations have also occurred due to the impact of the new language environment. We see new themes, language identity loss, cultural breakdowns, racism, sectarianism, patriarchy, new Dialects, educational / employment risks, sexual crises, climate allergies expanding and the opportunity to innovate and disseminate Tamil fiction. The world of asylum Tamil fiction is expanding and deepening. Here is an essay on some of the typical short stories from this Exile’s Tamil fiction.
Keywords: Kuruthi, thaay nilam, thamizh eezhan, thiravuhole, marathisar idarppaadu
Downloads
References
Aasikandharaja. (2014). Pulampeyar Ilakkiya Sirappithazh. Gnanam veliyedu, Columbo.
Chakravarthi. (2000). Yuththathin Irandaam Baham. Exile Publishers, France.
Es, Po. (2014). Pulampeyar Ilakkiya Sirappithazh. Gnanam veliyedu Columbo.
Gnanasekaran. (2014). Pulampeyar Ilakkiya Sirappithazh. Gnanam veliyedu Columbo.
Jeevakumaran, V. (2009). Sanganai Chandiyan. Mithra veliyedu,Chennai
Karunakaramurthy, Po. (2014). Berlin Ninaivuhal. kalachuvadu publishers, Chennai.
Kumarmurthy. (1995). Muham Thedum Manithan. Kalam veliyedu, Chennai.
Manivelupillai. (2014). Pulampeyar Ilakkiya Sirappithazh. Gnanam veliyedu Columbo.
Mathiyalagan. (1987). Kudiyeerikalin Ilakkiyath Thanmai, 6th International Conference Tamil Malar, Kuala Lumpur,Malaysia.
Melinji muththan. (2012). Aththaangu. Karuppu pirathihal veliyedu, Chennai.
Muthulingam, A. (2009). Americakari, Kalachuvadu publishers. Chennai.
Nuhman, M.A. (2014). Pulampeyar Ilakkiya Sirappithazh. Gnanam veliyedu Columbo.
Shobasakthi. (1997). Desathurohi. Karuppu Pirathihal Veliyedu, Chennai.
Suthakar, K.S. (2021). Valarkathal Inbam. Ezuthu Pirasuram. Chennai.
Venugopal, K.M. (2002). Ph.D., Desertation, Pugal Naaddu Tamil Kavithaikal. University of Madras, Chennai.
Vetrichelvan, D. (2009). Ezhathamizhar Puhalida Vaazhvum Padaippum. Chozhan Padaippaham, Chennai.
Vetrichelvan, D. (2009). Ayal naatu Tamil Ilakkiyam Mukkoodal Veliyedu. Chennai.
Vetrichelvan, D. (2017). Akkarai Paarvaikal Akkarai Pathivuhal. Mukkoodal veliyedu, Chennai.
Vetrichelvan, D, (2009). Pulampeyar Thamizhum Puhalida Thamizhum. Mukkoodal veliyedu, Chennai.
Yogarasa, Se. (2014). Pulampeyar Ilakkiya sirappithazh. Gnanam veliyedu, Columbo.