அருணகிரிநாதர்: ஒரு சிவயோகச் சித்தர்
Arunagirinathar: A Sivayoga Siddhar
DOI:
https://doi.org/10.37134/jvt.vol2.2.9.2021Keywords:
அருணகிரிநாதர், சித்தர் பாடல்கள், சித்தர் நெறி, முருகப்பெருமான், மெய்ஞ்ஞானம்Abstract
அருணகிரியார் முருகப்பெருமானைப் போற்றிப் பாடியுள்ள பாடல்களில் காணப்படும் சித்தர் நெறி குறித்த செய்திகளை ஆராய்ந்து முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த ஆய்வுக்குரிய தரவுகளான சித்தர் பாடல்களும் அருணகிரிநாதர் முருகன்மேல் பாடிய பாடல்களும் நூலக ஆய்வின் வழி பெறப்பட்டன. சித்தர் பாடல்கள் பெரிதும் வலியுறுத்தும் மூவாசை நீக்கம், வினையறுத்தல், இறைவனின் திருவடி, குருவின் துணை, சிவயோகநெறி ஆகிய கூறுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அருணகிரியாரின் பாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வு பண்புசார் (qualitative) அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்ட ஆய்வு நெறியை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படுத்தல் (descriptive) முறையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் வாயிலாக சில கருத்து முடிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அருணகிரிநாதர், பன்னெடுங்காலமாக முருகபக்தராகவே மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார். அவரது பாடல்களும் பக்திப்பாடல்கள் என்ற நிலையிலேயே அறியப்பட்டு வந்துள்ளன. முருகப்பெருமான் மீது அருணகிரியார் பாடியுள்ள பாடல்கள், சித்தர் பாடல்கள் போலவே மறைபொருளால் நிரம்பியவை. இவரது பாடல்களின் கருத்துகள் சித்தர் பாடல்களின் கருத்துகளோடு முழுவதும் இயைந்து செல்கின்றன. உயிர்களின்மீது பெருங்கருணை கொண்ட சித்தர்களைப் போல, உலகியல் துன்பங்களில் மக்கள் உழன்று விடலாகாது என்னும் பேரிரக்கம் கொண்டவர் அருணகிரியார். இறைவனைக் குருவாக ஏற்று, தன்னிலை அறிந்த சித்தர்களைப் போலவே, முருகனைக் குருவாகக் கொண்டு அருணகிரியார் தன்னையறிந்தார். எனவே அருணகிரிநாதர் ஒரு சிவயோக சித்தர் என்பது இக்கட்டுரையின் கருத்து முடிபாகும்.This article aims to analyze the Siddhar philosophies highlighted in Arunagirinathar’s Murugan devotional songs. The Siddhar songs and Arunagirinathar’s Murugan devotion songs used in this study were obtained through library research. Arunagiri’s songs are analyzed on the platform of the riddance of three desires, overcoming karma, devotion to God, Guru’s guidance, and the philosophy of Sivayoga which are the main themes found in Siddhar songs. Hence, this is a qualitative research and the article is written in a descriptive manner. For a long time, Arunagiri has been regarded as a Murugan devotee and his songs regarded as devotional songs. However, Arunagiri’s Murugan devotional songs are laced with hidden meanings just like Siddhar songs and their themes are synonymous to Siddhar songs. Arunagiri was as compassionate towards the population as the Siddhars and wanted to guide them away from worldly miseries. Arunagiri attained enlightment by accepting the Lord Murugan as his Guru, just as Siddhars did by accepting God as their Guru. Therefore, it can be concluded that Arunagirinathar is a Sivayoga Siddhar.
Keywords: Arunagirinathar, lord murugan, Siddhar poems, siddhar principles, wisdom
Downloads
References
Arun:akirinha:tha Cuva:Mikal:. (1937). Kanhtharanhupu:thi. Chennai, Pūmakaḷ vilāca accukkūṭam
Arun:akirinha:tha Cuva:Mikal:. (1993). Thirumutaith thirat:t:u. Chennai, Kanchipuram Nha:kalingka Munivar,
Aruṇakirinātar. (1949). Tiruppukal̲: viruttiyurai aṭaṅkiyatu. Amarampēṭu. Irājāttin̲a Mutaliyār.
Caravaṇamuttup Piḷḷai, Vā. (1927) Patiṉeṉ cittarkaḷ aruḷiya periya ñāṉakkōvai. Chennai, Ratna Nayakar & Sons.
Civattiyāṉāṉanta maharṣi. (1932). Kantaranupūti. Chennai, Murukavēl puttakacālai.
Clothey, F. W. (1983). SOME ASPECTS OF ARUNAGIRI'S. Śrīnidhiḥ: Perspectives in Indian Archaeology, Art, and Culture: Shri KR Srinivasan Festschrift, 261.
Govindhan, S. (2006). Barriers to spiritual fulfillment found in Siddhartha songs and ways to dispose of them. Journal of Indian Studies 9, 40-49.
Janakiraman, I. (2021). The Concept of God in Siddha Literature. International Research Journal of Tamil, 3(S-2), 201-206.
Kamalakkan:n:an, Pa:. (1954). Tiruppukaḻ kāṭṭum mutti neṟi, Chennai,Va:nathi Pathippakam
Karthikeyan, N. V., & Binder, A. (2008). Kandar Anubhuti: Gotteserfahrung des heiligen Arunagirinathar. Yoga-Vidya-Verlag.
Kirupāṉantavāri. (1954). Kantaranupūti: uraiyuṭaṉ. Chennai, Thiruppugazhlamiradham
Kōvēntaṉ, Ta. (2000). Tiruppukaḻ meypporuḷ teḷivurai: mutal pākam, Chennai, Mullai Nilaiyam.
Kuppucāmi Nāyuṭu, Ta. (1905) Kākapucuṇṭar ñān̲am [80]: Vāci Mun̲ivarukku upatēcañceytatu. Chennai, Śrīpatmanāpavilāca Accukkūṭam.
Man:iyan, Pa. Cu. (1999). Ciththar nhetikal:um ciththi mutaikal:um. Coimbotore, Vijaya Publication.
Māṇikkavācakam, Irā. (1982). Nam nāṭṭuc cittarkaḷ. Chennai, Aṉṉai Apirāmi Aruḷ.
Nellaiyappa piḷḷai. (1944). Kantaranupūti. Kangeya Nallur: Tirupugalamirtham Press
Parimēlaḻakar. (2010). Thirukkural: parime:lal-akar urai. 3rd ed, Madras , Thirumakal: Nhilaiyam
Rajantheran, M., Gill, S. S., Muniapan, B., Silllalee, K., & Manimaran, S. (2014). A critical analysis of siddha tradition in the context of Malaysian Hindu culture. Life Sci J, 11(7).
Roopa, M. (2021). The Theological Priciples of Siddhar and Vallalar Songs. International Research Journal of Tamil, 3(S-2), 107-111.
Sivapalan, G. (2013). Siddha Medicine as Descripted in Siddhar Literature. Journal of Indian Studies, 10(Special), 38-42.
Sivapalan, G., & Manimaran, S. (2021). Harmony beyond Religion in Siddhar and Sufi Literatures. Journal of Tamil Peraivu, 10(1), 23-29.
Sri, P. (1999). Aruṇakirinātariṉ vāḻkkai varalāṟu. Chennai, Alliance Company.
Thangavelu, M. K. (1981). The philosophy and teachings of saint arunagirinathar with special reference to kandar anubhuti. http://hdl.handle.net/10603/139988
Vayittiyaliṅkapiḷḷai, Ca. & Piracāntan̲, Śrī. (2018). Aruṇakirinātar aruḷicceyta: Kantaralaṅkāram, Colombu, Intu Camaya Kalācāra Aluvalkaḷ Tiṇaikkaḷam.
Vēlaṉ, tā.Ti. (1990). Tiruvaḷḷuvar oru cittar. Chennai, Suriyaan Publishing House.
Vijayakumar, B. (2021). Theological principle and doctrine emphasized by Thiruvarutha. International Research Journal of Tamil, 3(S-2), 222-227.