புளூம், ஆண்டர்சன் அடிப்படையில் தமிழ் முதுகலை வினாத்தாள் மதிப்பீடு

Tamil Masters Question Paper Assessment Based on Bloom, Anderson

Authors

  • P. Anitha Bagyaraj Research Scholar, Department of Tamil, Thiruvalluvar University, Vellore 632 115. Tamilnadu, INDIA
  • R. Jeyaraman Department of Tamil, Thiruvalluvar University, Vellore 632 115. Tamilnadu, INDIA

DOI:

https://doi.org/10.37134/jvt.vol3.1.1.2022

Keywords:

அறிதல், புரிதல், ஆளல், பகுத்தல், மதிப்பிடல், உருவாக்கல்

Abstract

கற்றல், கற்பித்தல், மதிப்பிடல் என்ற மூன்று கோணங்கள் கல்வியின் இன்றியமையாத கூறுகளாக உள்ளன. இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. ஒன்று இல்லையென்றாலும் கல்விச் செயல் முழுமையாகாது. கல்வி செயல்பாடு குறித்துப் பவணந்தி முனிவர், (2004) பொதுப் பாயிரத்தில் நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவரின் இயல்பு, கற்கும் முறை ஆகிய ஐந்து கூறுகளைக் கூறுகிறார். ஆனால் தேர்வு, மதிப்பீடு குறித்து அவர் பேசவில்லை. ஆகவே, தேர்வும் மதிப்பீடும் நவீன மரபாகக் காணப்படுகிறது. கற்றல், கற்பித்தலில் உள்ள நிறை குறைகளை அறிந்து அவற்றைச் செம்மைப்படுத்திக்கொள்ள மதிப்பீடு உதவுகிறது. மாணவர்கள் எந்த இடத்தில் இடர்படுகின்றனர்? அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை ஆசிரியர் அறிந்து அதற்கேற்றவாறு கற்பித்தலை மாற்றிக்கொள்ள மதிப்பீடு துணை செய்கிறது. இம்மதிப்பீடு பல வழிகளில் நடைபெறுகிறது. அவற்றில் ஒன்று வினா கேட்கும் முறை ஆகும். வாய்மொழியிலும் எழுத்துத் தேர்வுகளிலும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. மனிதன் அறிவு வளர்ச்சி பெற்றபோதே வினாக்கள் கேட்டுச் செய்திகளை அறிந்துகொண்டான். கேள்வி கேட்கத் தொடங்கியபோதே மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றுப் புதியவைகளைக் கண்டறிந்தான். அவன் அறிவு வளர்ச்சியடைந்து கொண்டே சென்றது. ஆகவே ஒருவரது அறிவு வளர்ச்சிக்கு வினாக்கள் கேட்டல் இன்றியமையாததாக உள்ளது.  இவ்வினாக்கள் கற்றல், கற்பித்தல் சூழலில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் ஒரு கருவியாகச் செயல்படுகின்றன. அறிவு வளர்ச்சிக்கும், சிந்தனைத் தூண்டலுக்கும் வினாக்கள் தேவையாகின்றன. இவ் வினாக்களை மதிப்பீடு செய்ய பெஞ்சமின் புளூமின் கற்றல் கோட்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளன.  அவை அறிவுப்பகுதி, உணர்வுப்பகுதி, உள இயக்கப்பகுதி (செயல்) என்பனவாகும். அறிவுப்பகுதியில் அறிதல், புரிதல், ஆளல், பகுத்தல், மதிப்பிடல், உருவாக்கல் என்ற ஆறு கூறுகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் முதுகலைத் தமிழ்ப் பருவத்தேர்வு வினாத்தாள் ஆராயப்படுகிறது.

Three aspects of learning, teaching and evaluating are essential elements of education. These three are inter connected with each other and then cannot function independently. Sage Bhavananti (2004) general payiram Explain about the general qualities about the quality of the book, teaching methods, students response, teaching pedagogy, learning methods all these five aspects explicitly in the research. But he did not talk about examination and valuation. But all these considered as norms in the model world. Learning and teaching as a lot of positive and negative aspects to rectify these discrepancies examinations and valuations methodologies are followed. It is the duty of the teacher to find out where the students faulted and rectify them taking them towards path of success is they are prime duty. This kind of valuation is followed in various places. One among that is questioning in the written format and the other one is oral questioning or viva voce. Man an evolved by questioning anything and everything around him and finding answers for his quest. Once he started questioning he valued as in full pledge Individual. His knowledge grew as used questions as a tool between these questions kindle the interest of the students and the teaching pedagogy reaches it speak creating a healthy environment. Knowledge needs in order to evaluate the question triggers once intelligence, emotions and mental makeup. As per as blooms theory according to knowledge, understanding, application, segregating, evaluating and creating. Based on these aspects PG examination question paper is formulated. 

Keywords: Application, Analysis, Creation, Evaluation, Knowledge, Understanding.

 

Downloads

Download data is not yet available.

References

Amaragunasekaran SD, (199). Curriculum, National Institute of Education.

Arang Nayakam Ch., (1986). Educational Thoughts, Chennai: Padma Publishing.

Aravanan KP, 2000, Tamil Literature, Culture, Politics, Education, Pondicherry, Tamilkottam.

Aravendan Ira, 1996, Literary Education, Chidambaram: Speaker Printers.

Benjamin Bloom s., 1974, Taxonomy of Educational Objectives, Longman Group LTD London.

Chitra Ku., 2012, Tamil Grammar Teaching Technology Then and Now, Thanjavur: Bharathidasan University.

Elavarasu. Soma., (2004), Nannool Eluttatikaram, Manivasakkar Publishing House, Barimunai, Chennai - 600 108.

Ganapathy V., Chandraka Rajamohan., 2009, Philosophy and Management of Education, Chennai: Santa Publishers.

Ganapathy V., Chandrika Rajamohan., 1992, Natramil Teaching Methods, Chennai: Santa Publishers.

Kalaichselvi V., 2007, Tamil in Education, Erode: Sanjeevi Publishing.

Karthikeyu Sivathambi, 2001, Excellence in Tamil Teaching, Chennai: World Tamil Research Institute.

Karunakaran K., 1990, Tamil Teaching Approaches, Coimbatore: Easwar Enterprises.

Keerthika S., 2019, Elementary Art Project, Teaching and Evaluation, Salem: Samyukta Publishing.

Komalavalli C., 2010, Educational Tamil Teaching Methods, Chennai: Polymath Press.

Pratibha, 2007, Academic Assessment, Chennai: Sharda Publishing.

Rajeswari N., 2006, Principles of Art Project Function, Chennai: Santa Publishers.

Rathinasabapathy P., 2001, Exam in Education, Chennai: Santa Publishers.

Rathinasabapathy P., 2002, Cracks in the Questions, Chennai: Santa Publishers.

Rathinasabapathy P., 2013, Tamil Education, Chennai: Kamaleshwaran Publishing House.

Saba Jayarasa, 1995, School and Education Program, Jaffna: University of Jaffna.

Saba Jayarasa, 2007, Art Project, Colombo: Intraocular Publishing.

Simpson Rajkumar V., 2018, Tamil Textbooks in Tamil Nadu Singapore High Schools - Evaluation, Thanjavur: Tamil University.

Susila K., 2010, Application of Educational Technology in Teaching and Learning, T. Sethupandian Tamil Research Thoughts, Chennai: Tamil Nadu Institute of Educational Research and Development.

Vasanthakumar Chowdhury, 2009, Tamil Studies and Education in a New Perspective, Chennai: Shanthi Library.

Downloads

Published

2022-04-15

How to Cite

Bagyaraj, P. A., & Jeyaraman, R. (2022). புளூம், ஆண்டர்சன் அடிப்படையில் தமிழ் முதுகலை வினாத்தாள் மதிப்பீடு: Tamil Masters Question Paper Assessment Based on Bloom, Anderson. Journal of Valartamil, 3(1), 1–19. https://doi.org/10.37134/jvt.vol3.1.1.2022